Jump to Content

விரைவானது, பாதுகாப்பானது, எளிதானது. ஒரே தட்டலில் Google மூலம் உள்நுழையலாம்.

உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தி பாதுகாப்பாகவும் எளிமையாகவும் பதிவுசெய்யலாம் உள்நுழையலாம். இதன்மூலம், பயனர்பெயர்களையும் கடவுச்சொற்களையும் டைப் செய்வதற்கான நேரத்தைச் சேமித்து உங்களுக்குப் பிடித்த ஆப்ஸிலும் தளங்களிலும் அதிக நேரம் செலவிடலாம்.

ஒரு லேப்டாப் திரையில் தோன்றும் 'Google மூலம் உள்நுழைக' பட்டன் மேல் கர்சர் கொண்டுசெல்லப்படுகிறது. அந்தத் திரையைச் சுற்றி ஆப்ஸ் ஐகான்கள் உள்ளன. லேப்டாப்புக்கு அருகில், ஒரு மொபைல் சாதனத்திலும் 'Google மூலம் உள்நுழைக' பட்டன் தோன்றுகிறது.
  • சிரமமின்றி உள்நுழையலாம்

    பயனர்பெயர்களையும் கடவுச்சொற்களையும் டைப் செய்யாமலேயே எளிதாகவும் பாதுகாப்பாகவும் புதிய கணக்குகளை உருவாக்கலாம், உங்களுக்குப் பிடித்த ஆப்ஸிலும் தளங்களிலும் உள்நுழையலாம்.

  • எந்தச் சாதனத்தையும் பயன்படுத்தலாம்

    iOS, Android உட்பட நீங்கள் பயன்படுத்தும் அனைத்துச் சாதனங்களிலும் உலாவிகளிலும் சுமூகமான, பரிச்சயமான உள்நுழைவு அனுபவத்தைப் பெற்று மகிழுங்கள்.

  • உங்கள் இணைப்புகளைக் கட்டுப்படுத்தலாம்

    உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, சுயவிவரப் படம் போன்ற கணக்கு விவரங்களைப் பாதுகாப்பாகப் பகிர்வதன் மூலமும், Drive போன்ற Google ஆப்ஸுக்கான அணுகலை நிர்வகிப்பதன் மூலமும் உங்கள் ஆப்ஸ் மற்றும் தளங்களின் கட்டுப்பாட்டை உங்கள் வசமே வைத்திருக்கலாம்.

  • Google மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்

    வலுவற்ற உள்நுழைவுகள், ஏற்கெனவே பயன்படுத்திய கடவுச்சொற்கள் ஆகிய சிரமங்கள் இனி இருக்காது. உங்கள் Google கணக்கு மூலம் பாதுகாப்பாக உள்நுழைவதால், உங்கள் கடவுச்சொற்களைச் சேமிக்க குறைவான ஆப்ஸையும் தளங்களையுமே சார்ந்திருப்பீர்கள். இதனால் உங்கள் தரவு பாதுகாப்பாக இருக்கும்.

'Google மூலம் உள்நுழைவு' அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?

உங்கள் Google கணக்கு மூலம் எந்தச் சாதனத்திலிருந்தும் உங்களுக்குப் பிடித்த ஆப்ஸையும் தளங்களையும் எளிதாக அணுகலாம்

ஆப்ஸ்/தளத்தில் 'Google மூலம் உள்நுழைக' எனும் பட்டனைக் கிளிக் செய்யுங்கள்

பயன்படுத்துவதற்கான Google கணக்கைத் தேர்வுசெய்யுங்கள்

ஆப்ஸ்/சேவையில் முதல்முறையாக Google மூலம் உள்நுழைகிறீர்கள் எனில் உங்கள் Google கணக்கிற்கான பெயர், மின்னஞ்சல் முகவரி, சுயவிவரப் படம் ஆகியவற்றைப் பகிருங்கள்
சில ஆப்ஸ் உங்கள் முகவரி/ஃபோன் எண் போன்ற பிற தகவல்களையும் கேட்கக்கூடும். இவற்றை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் Google கணக்கு அமைப்புகளில் கட்டுப்படுத்தலாம்.

ஆப்ஸ்/தளத்தில் உள்நுழையுங்கள்

அவ்வளவுதான், இப்போது நீங்கள் உள்நுழைந்துவிட்டீர்கள்!
அடுத்த முறை இதே Google கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் மீண்டும் எளிதாக உள்நுழையலாம்

ஒரு சாதனத்தில் உள்நுழைவுத் திரை தோன்றுகிறது. பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் புலங்களுக்குக் கீழ், புதிய கணக்கை உருவாக்குவதற்கான விருப்பமும் Google மூலம் உள்நுழைவதற்கான விருப்பமும் உள்ளன. 'Google மூலம் உள்நுழைக' பட்டன் பெரிதாகி, திரைக்கு மேலே பாப்-அப் ஆகிறது. ஒரு கர்சர் அந்த பட்டனைக் கிளிக் செய்கிறது.
சாதனத் திரையில் ஒரு பாப்-அப் தோன்றுகிறது. ஆப்ஸில் உள்நுழைய ஒரு Google கணக்கைத் தேர்வுசெய்யுமாறு அல்லது மற்றொரு கணக்கைச் சேர்க்குமாறு அது பயனருக்குத் தெரிவிக்கிறது. அதில், பயன்படுத்துவதற்கான ஒரு கணக்கைக் கர்சர் தேர்ந்தெடுக்கிறது.
பயனரை ஆப்ஸில் உள்நுழைய வைக்க Googleளுக்கு அனுமதி வழங்குமாறு கேட்கும் மற்றொரு பாப்-அப் தோன்றுகிறது. அதிலுள்ள 'தொடர்க' பட்டனைக் கர்சர் கிளிக் செய்கிறது. அதன் பிறகு பாப்-அப் மூடப்பட்டு, ஓர் ஆப்ஸ் ஏற்றுப்படுவதாகத் திரையில் காட்டப்படுகிறது.

Google வழங்கும் நம்பகமான பாதுகாப்பு மூலம் இன்னும் பாதுகாப்பாக உள்நுழையலாம்

  • இயல்பாகவே பாதுகாப்பானது

    நீங்கள் விரைவான, பாதுகாப்பான செயல்பாடு மூலம் உள்நுழையலாம். ஆன்லைனில் உங்கள் தகவல்கள் சேமிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், 'Google மூலம் உள்நுழைவு' அம்சம் மூன்றாம் தரப்புத் தரவு மீறல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகிறது.

  • முழுக் கட்டுப்பாடும் உங்கள் வசமே இருக்கும்

    ஒவ்வொரு மூன்றாம் தரப்பு ஆப்ஸுடனும் தளத்துடனும் பகிர்வதற்கு நீங்கள் தேர்வுசெய்கின்ற தகவல்களை நிர்வகிக்கலாம். உங்கள் அமைப்புகளை எப்போது வேண்டுமானாலும் Google கணக்கில் மாற்றிக்கொள்ளலாம்.

  • வடிவமைப்பின்படி தனியுரிமையை மையப்படுத்தியது

    'Google மூலம் உள்நுழைவு' அம்சத்திலிருந்து பெறப்படும் தகவல்கள்/செயல்பாடுகளை விளம்பரங்களுக்காகவோ வேறு ஏதேனும் Google தயாரிப்பிற்காகவோ Google பயன்படுத்துவதில்லை. உங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பொறுப்பான தரவு நடைமுறைகளை நாங்கள் கடுமையாகப் பின்பற்றுகிறோம்.

உங்களுக்குப் பிடித்த ஆப்ஸிலும் தளங்களிலும் ஒரே தட்டலில் உள்நுழையலாம்